கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கல்விக் கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை வழங்கி,
திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் உயரிய நோக்கத்துடன், அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரத்தில் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழிற்பயிற்சி நிலையம் ஆகஸ்ட் 2010
முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் வெல்டர், கணினி இயக்குநர் (COPA),எலக்ட்ரீசியன், பிட்டர் மற்றும் இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் ஆகிய ஐந்து
தொழிற்பிரிவுகளில் தரமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழிற்தேர்வு (AITT)
நடத்தப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (National Trade Certificate - NTC) வழங்கப்படுகிறது.
தற்போதைய தொழில்துறை சூழலில், திறன்
அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, ஐடிஐ பயிற்சியை முடித்த மாணவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில்
விரைவாகவும் அதிக அளவிலும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.இந்தச் சிறப்புமிக்க தொழிற்கல்விப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள தங்களுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும், இனிய எதிர்கால நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Mr M Selvamuthukumar,Principal